முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி மாஸ்டர்ஸ்: 4-வது சுற்றில் முர்ரே - ஃபெடரர்

புதன்கிழமை, 26 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மார்ச் 27 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

 கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் தீமோ டி பெக்கரையும், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஆன்டி முர்ரே 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸையும் தோற்கடித்தனர். 

இதுவரை லோபஸுடன் மோதிய 9 முறையும் வெற்றி கண்டுள்ள முர்ரே, அடுத்ததாக பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார். சோங்கா தனது 3-வது சுற்றில் 4-6, 7-6 (6), 7-5 என்ற செட் கணக்கில் சைப்ரஸின் மார்கஸ் பாக்தாதிஸை தோற்கடித்தார். ஸ்பெயினின் டேவிட் ஃபெடரர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஆன்ட்ரே செப்பியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான லீ நா 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸையும், போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவையும், ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 7-6 (6), 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் அலைஸ் கார்னெட்டையும் தோற்கடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்