முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: டிஜோகோவிக் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      விளையாட்டு
Image Unavailable

பாரிஸ், மே. 31 - பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 4 -வது சுற்றில் வெற் றி பெற்ற செர்பிய வீரர் டிஜோகோவிக் கால் இறுதிச் சுற்றுக்கு  முன் னேறினார். இது பற்றிய விபரம் வருமாறு - 

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. 

இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்ட த் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 4 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடந் தது. இதில் செர்பிய முன்னணி வீரரான டிஜோகோவிக்கும், பிரான் ஸ் வீரரான ரிச்சர்டும் பலப்பரிட்சை நடத்தினர். 

உலகின் இரண்டாம் நிலை வீரரான டிஜோகோவிக் இதில் அபாரமாக ஆடி, 6 - 4, 6 - 4, 6 - 2 என்ற செட் கணக்கில் பிரான்சைச் சேர்ந்த 13 -ம் நிலை வீரரான ரிச்சர்டை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தாவினார். 

செர்பியாவின் நம்பிக்கை நட்சத்திரமான டிஜோகோவிக் கால் இறுதிச் சுற்றில், இத்தாலி வீரர் பேபியோ பாக்னியை எதிர்கொள்ள இருக்கிறார். அவர் 4 -வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்பர்ட்டை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், இளம் வீரரான வாவ்னிகாவுடன் மோதினார். இதில் பெடர ர் வெகு நேர்த்தியாக ஆடினார். இறுதியில் அவர் 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 4 -வது சுற்று ஆட்டத்தில் 5 - ம் நிலை வீராங்கனையான பிரான்செஸ்கா 6 - 3, 2 - 6, 6 - 4 என்ற செ ட் கணக்கில் 10 -ம் நிலை வீராங்கனையான ஜான்கோவிக்கை (செர்பி யா) வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். 

செர்பியாவின் முன்னணி வீராங்கனையான ஜான்கோவிக் அடுத்ததா க, கால் இறுதிச் சுற்றில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியாவை சந்திக் க இருக்கிறார். அவர் 4 -வது சுற்றில், ஜூவானரேவாவை அதிர்ச்சிகர மாக வீழ்த்தினார். 

மற்ற ஆட்டங்களில் பிரான்சைச் சேர்ந்த மரியான் பார்ட்ரோலி, ரஷிய வீராங்கனை குஜ்னெட்சேவா, ஆகியோர் 4 - வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago