முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திசை திருப்புகிறார் கருணாநிதி - செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

குடியாத்தம், மே 31 - ஊழல் சேற்றில் சிக்கித் தவித்த தமிழகத்தை தலைநிமிர்த் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் நல்ல தொடக்கத்தை திசை திருப்பும் வகையில் கருணாநிதியின் அறிக்கைகள் உள்ளன என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான செ.கு.தமிழரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி சுரண்டுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தமிழகத்தை தி.மு.க. அரசு பாலைவனமாக மாற்றிவிட்டுச் சென்றுவிட்டது.  தமிழகத்தின் கடன்தொகை ரூ. 1 லட்சம் கோடி. இதற்கு நாள் ஒன்றுக்கு வட்டி ரூ. 30 கோடி. இந்த நிலையில் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, மிகத் துணிச்சலாக மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நலத்திட்டங்களாக மாதம் 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை ரூ. 1000, ஏழைப்பெண்களின் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட முக்கியமான 7 திட்டங்களை நிறைவேற்று அரசாணை பிறப்பித்தார். 

தொடர் நடவடிக்கையாக தினம் தினம் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனைகளை நடத்தி, தமிழகத்தை வளப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக எடுத்துவருகிறார். இந்த நல்ல தொடக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதை திசை திருப்பும் நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொண்டுள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சின்போது ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். அதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். அதையடுத்து கோட்டூர்புரத்தில்  தலைமைச் செயலகம் கட்ட முடிவெடுத்த ஜெயலலிதா, அதற்காக நிலம் தேர்வு செய்து, நிதியையும் ஒதுக்கி, அங்கு அடிக்கல்லை நாட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு  தமிழக முதல்வராக கருணாநிதி கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை நூலகமாக மாற்றினார். இந்த செயல்கள் கருணாநிதியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றன. 

கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ. 400 கோடியில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதாக அறிவித்த கருணாநிதி, ரூ. 1200 கோடி வரை அதற்கு செலவானதாக தெரிவித்தார். பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பே அதன் திறப்பு விழாவை நடத்தி, அங்கு தலைமைச் செயலகத்தை அவசர அவசரமாக மாற்றினார். ஏற்கனவே இருந்த தலைமைச் செயலகத்தை முடக்கிவிட்டார். எதற்காக இந்த நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொண்டார்? 

இந்த நிலையில் தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத தலைமைச் செயலகத்தை தவிர்த்துவிட்டு, பழைய தலைமைச் செயலகத்தையே புதுப்பித்து, அதில் தலைமைச் செயலகத்தை இயக்கத் தொடங்கினார்.  ஆனால் கருணாநிதியோ நான் கட்டியதால்தான் புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா தவிர்க்கிறார் என தவறான அறிக்கைகள் விடுகிறார். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நல்ல தொடக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி, மக்கள் மத்தியில் விஷ விதையை தூவுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago