முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தேர்தல் அலுவலகத்தில் தற்கொலை படை தாக்குதல்

புதன்கிழமை, 26 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், மார்ச் 27 - ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காபூலில் உள்ள பிராந்திய தேர்தல் அலுவலகத்தில் தலிபான் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சீர்குலைப்பதாக, வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காபூலுக்கு மேற்கே தாருல்லாமன் என்ற இடத்தில் பிராந்திய தேர்தல் அலுவலகம் உள்ளது. இங்கு தலிபான் தற்கொலை படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி திடீரென புகுந்து தன் உடம்பில் பொருத்தப்பட்ட குண்டுகளை வெடிக்க செய்தார். அந்த நேரத்தில் மேலும் சில தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே அதிரடியாக அலுவலகத்துக்குல் நுழைந்தனர்.

தலிபான் தற்கொலை படையின் துப்பாக்கி தாக்குதலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆப்கன் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பதிலடி தாக்கல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 2 போலீஸ் அதிகாரிகள் பலியானதாக ஆப்கன் உள்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் சித்திக் தெரிவித்தார். தேர்தலில் தற்போதை அதிபர் ஹமீது கர்சாய்க்கு எதிராக போட்டியிடும் முன்னணி வேட்பாளர் அஷ்ரப் கனியின் வீடும் தாக்குதல் நடந்த அலுவலகத்துக்கு அருகே தான் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்