முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹேல்ஸ் அதிரடி சதம்: இங்கிலாந்து அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்ட காங், மார்ச்.29 - வங்கதேசத்தில் நடந்து வரும் உலக கோப்பை டி20 போட்டியில் நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்தும் இலங்கையும் பலப்பரிட்சை நடத்தின. சிட்ட காங்கில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்தவு செய்தது. இதையடுத்து இலங்கை வீரர்கள் தில்சானும், பெரேராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 3 ரன்களுக்கு வெளியேறிய பெரேராவை தொடர்ந்து ஜெயவர்த்தனே களம் இறங்கினார். தில்சான் - ஜெயவர்த்தனே ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 149 ரன்களுக்குதான் பிரிந்தது. ஜெயவர்த்தனே 89 ரன்களுக்கு ( 51 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் ) வெளியேறினார். நிதானமாக ஆடிய தில்சான் 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சங்கக்காரா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.  பெரேரா 23, மேத்யூஸ்  11 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 20 ஓவரில் இலங்கை அணி 4  விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. இதையடுத்து 190 ரன் என்ற வலுவான இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்கமே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் லம்ப் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே வெளியேறினார். அடுத்த பந்திலேயே அலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். முதல் ஓவரிலேயே 2 விக்கெட் டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. ஆனால் ஹேல்ஸ் - மார்கன் ஜோடி இங்கிலாந்து வெற்றிக் கனவை உறுதிபடுத்தினர். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சை விளாசி தள்ளினார். 152 ரன்களில் தான் இந்த ஜோடியை இலங்கையால் பிரிக்க முடிந்தது. மார்கன் 57 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 38 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் விளாசினார். அடுத்து வந்த பட்லர் 2 ரன்களில் வெளியேற ஆட்டம் பரபரப்பானது. ஆனால் ஹேஸ்சும், போபாராவும் இங்கிலாந்து வெற்றியை உறுதிப்படுத்தினர். 19.2 ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றிக்கான 190 ரன்களை எடுத்தது. ஹேல்ஸ் ஆட்டம் இழக்காமல் 116 ரன்கள் எடுத்தார். 64 பந்துகளை சந்தித்த ஹேல்ஸ் 11 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் விளாசினார். போபாரா 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்