முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சியாச்சின் பிரச்சினை: இந்தியா-பாகிஸ்தான் பேச்சு

புதன்கிழமை, 1 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.1 - சியாச்சின் பனிச்சிகரம் பிரச்சினை தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. 2 நாள் நடைபெறும் பாதுகாப்பு செயலர்கள் அளவிலான இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் பிரதீப் குமார் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் சையத் அதர் அலி தலைமையிலான குழுவும் பங்கேற்றுள்ளன. இது குறித்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, 

பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்திருந்தது. கூட்டம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்படும். 2500 சதுர கி.மீ பரப்பளவு உள்ளது சியாச்சின். அப்பகுதியில் சராசரியான எல்லை எது என்பது வரையறுக்கப்படவில்லை. அப்பகுதியை பாதுகாப்பதற்காக இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்தி உள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. 

ராணுவ வீரர்களை குறைப்பது என இரு தரப்பும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டாலும் இரு தரப்பிலும் ஒருவித அச்சம் உள்ளதால் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை நிலவி வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்