பிஜி தீவில் செப்டம்பர் 17-ல் தேர்தல்

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

சுவா, மார்ச் 30 - பிஜி தீவில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிஜியில் தற்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கு அதிபர் எபிலி நைலடிகாயூ ஒப்புதல் அளித்துள்ளார்.

தேர்தல் முடியும் வரை வாரிகியூ பாய்னிமரான இடைக்கால் பிரதமராக இருப்பார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: