முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் விவகாரம்: ஒபாமா - புடின் ஆலோசனை

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ,மார்ச்.30 - உக்ரைன் விவகாரம் உச்சம் பெற்றுவரும் நிலையில், இவ்விகாரத்திற்கு தீர்வு காண்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா தனது படைகளை விலக்க வேண்டும் என்றும் உக்ரனை நோக்கி அதன் படைகள் முன்னேற கூடாது என்றும் ஒபாமா புதினிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

ரஷ்ய ஆதரவாளராக இருக்கும் உக்ரைன் அதிபர் விக்டர் யானு கோவிச்சுக்கு எதிர்ப்பு அதிகரித் ததையடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது அந்நாட்டில் புதிய அரசு ஒன்று ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில், அந் நாட்டுக்குள் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்தனர். கிரிமியா பகுதி ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் எதிர்ப்பையும் மீறி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரத்திற்கு ராஜ தந்திர ரீதியாக தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்