இலங்கை மாகாண தேர்தலில் குறைவான வாக்குப் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச் 31 - இலங்கையின்  மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இரு மாகாணங்களிலும் மொத்தம் 50 லட்சம் வாக்காளர்கள் இருந்தபோதிலும், 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

 அதிலும் மேற்கு மாகாணத்தில் மட்டும் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இது இலங்கையின் மேற்கு மாகாண தேர்தல் வரலாற்றில் குறைவானதாகக் கருதப்படுகிறது என்று தேர்தல் கண்காணி்ப்பாளர் குழுவின்  உறுப்பினர் கீர்த்தி தென்கூன் தெரிவி்த்தார். தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் அதிக வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.      

இதை ஷேர் செய்திடுங்கள்: