பிரிட்டனில் விமான விபத்து: 2 பேர் சாவு

திங்கட்கிழமை, 31 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஏப்.1 - பிரிட்டனில் புறநகர் பகுதியில் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த விமானியும், பயிற்சி விமானியும் உயிரிழந்தனர்.

இது குறித்து அந்நாட்டு போலீசார் கூறியதாவது: நார்த் வீல்ட் என்ற பகுதியில் இருந்து சென்ற அந்த விமானம், குக்ஸ்மில் கிரீன் என்ற கிராமத்தில் உள்ள நிலத்தில் விழுந்தது. சுமார் 1,800 அடி உயரத்தில் பறந்த அந்த விமானத்தில் சைமன் ஹுல்மே என்ற விமானியும், ஸ்பென்சர் பென்னட் என்ற பயிற்சி விமானியும் இருந்தனர். விழுந்தவுடன் தீப்பற்றிய அந்த விமானம், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் முற்றிலும் எரிந்து நாசமானது. அதில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பகுதியில் செல்ம்ஸ்ஃபோர்ட்-ஒன்ரப் சாலை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சாகசத்தில் ஈடுபட முயன்ற அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: