பாரிஸ் நகருக்கு முதல் பெண் மேயர் தேர்வாகிறார்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பிராட்டிஸ்லவா, ஏப்.1 - பிரான்ஸில் பாரிஸ் மேயர் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பாரிஸ் நகரில் முதல் முறையாக பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பிரான்ஸில் அதிபர் ஹொலாந்தின் சோஷலிஸ்ட் கட்சிக்கு பல்வேறு நேருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போதைய பிரதமர் ஜீன் மார்க் அர்யலுட்டுக்குப் பதிலாக புதிய பிரதமராக மானுவேல் வால்ஸ் நேர்ந்தேடுக்கப்பட வாய்புள்ளதாகக் கூறப்படுகிறது. பாரிஸில் மேயர் பதவிக்கு சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் அன்னி ஹிடால்கோ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாப்புலர் இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் வேட்பாளர் நத்தாலி கோஸியஸ்கோ மோர்ஜித் போட்டியிடுகிறார்.

பாரிஸில் முதல் கட்ட வாக்குப்பதிவு நியூ கால்டோனியாவில் உள்ள பிரெஞ்சு பசிபிக் பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவின் படி நத்தாலி கோஸிக்கு வெற்று வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. எனினும், சோஷலிஸ்ட் வேட்பாளர் அன்னி ஹிடால்கோ பாரிஸில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: