வட-தென் கொரிய நாடுகள் குண்டு வீசி திடீர் தாக்குதல்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

சியோல், ஏப்.1 - வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே சர்ச்சைக்குறிய கடல் பகுதியில் நேற்று அதிகாலை இரு நாடுகளும் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரியா போருக்கு பின்னர் வட கொரியா, தென் கொரியா என இரண்டாக பிரிக்கப்பட்டது. ரஷ்யா ஆதரவுடன் வட கொரியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதன்பின், தென் கொரிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும், அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் வட கொரியா முயர்சிப்பதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இரு நாட்டு கடல் எல்லை பகுதிகளில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3.15 மணி அயளவில் தென் கொரிய பகுதி மீது வட கொரியா குண்டுகளை வீசியது. அதற்கு தென் கொரிய கப்பல் படையும் பதிலடி கொடுத்தது. இரு நாட்டு படைகளும் வெடிகுண்டுகளை வீசி தாக்கல் நடத்தியதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தென் கொரியா கடல் எல்லை பகுதியில் இருக்கும் யோன்பியோங் மற்றும் பாயேங்கியோங் தீவுகளில் இருந்த மக்களை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றினர்.

அதன் பிறகு தென் கொரிய ராணுவம் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் வடகொரியாவை நோக்கி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: