முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது

புதன்கிழமை, 1 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கார்டிப், ஜூன். 1 - இலங்கை அணிக்கு எதிராக கார்டிப் நகரில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இடைஇடையே மழை பெய்ததால் இறுதியில் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளன்று டிரம்லட் மற்றும் ஸ்வான் இருவரும் அபாரமாக பந்து வீசி ஆட்டத்தின் போக்கையே மாற்றி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்ட

ர்சன் 2 - வது இன்னிங்சில் கலந்து கொள்ளவில்லை. இந்தப் போட்

டியில் நான்கு பந்து வீச்சாளர்களுடன் கேப்டன் ஸ்ட்ராஸ் களம் இறங்

கினார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இறுதியில் அவர் ஒரு வழி

யாக வெற்றி பெற்று விட்டார். 

இலங்கை அணி கேப்டன் தில்ஷான் தலைமையில் இங்கிலாந்தில் சுற்

றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிக

ள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி கார்டிப் நகரில் உள்ள சோபியா கார்டனில் கடந்த 26 -ம் தே

தி துவங்கி 30 -ம் தேதியுடன் முடிவடைந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 118.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 400 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 3 வீரர்கள் அரை சதமும் அடித்த  

னர்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிரசன்னா ஜெயவர்த்தனே 168 பந்

தில் 112 ரன்னை எடுத்தார். கேப்டன் தில்ஷான் 94 பந்தில் 50 ரன்னையும், பரணவிதானா 191 பந்தில் 66 ரன்னையும், சமரவீரா 84 பந்தில் 58 ரன்னையும் எடுத்தனர். 

தவிர, பெரீரா மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 25 ரன் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 66 ரன்னைக் கொடுத்து 3 விக்

கெட் எடுத்தார். ஸ்வான் 78 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்  எடுத்

தார். தவிர, பிராட் மற்றும் டிரம்லட் ஆகியோர் தலா 1 விக்கெட் எடு

த்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 155 ஓவரில் 5 விக்

கெட்டை இழந்து 496 ரன்னை எடுத்து டெக்ளேர் செய்தது. அந்த 

அணி சார்பில் ஒரு வீரர் இரட்டை சதமும், இரண்டு வீரர்கள் சதமும் அடித்தனர். 

இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிராட் 409 பந்தில் 203 ரன்னை எடுத்தார். குக் 274 பந்தில் 133 ரன்னை எடுத்தார். இயான் பெல் 159 பந்தில் 103 ரன்னை எடுத்தார். இலங்கை அணி தரப்

பில், லக்மல், தில்ஷான், மென்டிஸ் மகரூப் மற்றும் ஹெராத் ஆகி

யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 96 ரன் முன்னிலை பெற்று இருந்தது. இந்த நிலையில் 5 -வது நாள் ஆட்டம் துவங்கியது. இதில் இலங்

கை அணி 2 -வது இன்னிங்சை ஆடியது. எனவே இந்தப் போட்டி டிரா

வில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத திரு

ப்பமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 24.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 82 ரன்னில் சுருண்டது. அந்த அணி வீரர்

களில் யாரும் கால் சதத்தை தாண்டவில்லை. 

இதனால் இங்கிலாந்து அணி இந்த முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்

னிலை பெற்று உள்ளது. 

பின் வரிசை வீரரான பெரீரா அதிகபட்சமாக 20 ரன்னை எடுத்தார். ஜெயவர்த்தனே 15 ரன்னையும், சங்கக்கரா 14 ரன்னையும், மென்டிஸ் 12 ரன்னையும், தில்ஷான் 10 ரன்னையும் எடுத்தனர். பரணவிதானா, சமர

வீரா மற்றும் மகரூப் ஆகியோர் பூஜ்யத்தில் ஆட்டம் இழந்தனர். 

இங்கிலாந்து அணி தரப்பில், வேகப் பந்து வீச்சாளர் டிரம்லட் 40 ரன்

னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். முன்னணி சுழற் பந்து வீச்சாள

ரான ஸ்வான் 16 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, பிராட் 2 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டிராட் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்