முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 கலெக்டர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,  ஜூன்,1 - தமிழகத்தில் 21 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.  இவர்கள் பல்வேறு துறைகளில் அரசு செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது. 

 1. பி.உமாநாத் கோவை கலெக்டர் ,தமிழக அரசின் நிதித்துறை இணை செயலாளரா நியமிக்கப்பட்டார். 

 2. பி.சீத்தாராமன் கடலூர் கலெக்டர் சுனாமி nullநீடித்த வாழ்வாதார திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

 3. எம்.வள்ளலார் திண்டுக்கல் கலெக்டர் தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார் .

 4. சி.காமராஜ் ஈரோடு கலெக்டர் போக்குவரத்து துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

5. ராஜேந்திர ரத்னு கன்னியாகுமரி கலெக்டர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் .

6. ஜெ.உமா மகேஸ்வரி கரூர் கலெக்டர் உயர் கல்வித்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

7. ஆர்.பழனிச்சாமி விழுப்புரம் கலெக்டர் நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

8. எம்.விஜயகுமார் பெரம்பலூர் கலெக்டர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.  

9. ஏ.சுகந்தி புதுக்கோட்டை கலெக்டர் சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

10. டி.என்.அரிகரன் ராமநாதபுரம் கலெக்டர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 

11. ஜெ.சந்திரகுமார் சேலம் கலெக்டர் வருவாய் துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.  

12. எம்.எஸ்.சண்முகம் தஞ்சாவூர் கலெக்டர் தொழில் துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் .

13. எம்.ஜெயராமன் திருநெல்வேலி கலெக்டர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 

14. டி.பி.ராஜேஷ் திருவள்ளூர் கலெக்டர் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய துறை, செய்தித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 

15. சி.சமயமூர்த்தி திருப்nullர் கலெக்டர் பொதுத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் . 

16. வி.கே.சண்முகம் விருதுநகர் கலெக்டர் வேளாண்மைத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.  

17. டி.கே.பொன்னுசாமி அரியலூர் கலெக்டர் எரிசக்தித்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

18. வி.பழனிக்குமார் வேலூர் கலெக்டர் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார்.

19. எஸ்.மதுமதி நாமக்கல் கலெக்டர் சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக நியமனம்(சுகாதாரம்) 

20. வி.சம்பத் சிவகங்கை கலெக்டர் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன நிர்வாக இயக்குனராக நியமனம்.

21. மகேசன் காசிராஜன் திருச்சி கலெக்டர் நில வடிnullர் முகமை செயல் இயக்குனரகா நியமனம் செய்யப்பட்டார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்