கிரேக்க பார்லி.யில் சர்ச்சைக்குறிய மசோதா நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

ஏதென்ஸ், ஏப்.2 - கிரேக்க நாடாளுமன்ற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்தை அகிகரிக்கும் சீர்திருத்த மசோதாக்களை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

நிதி நேருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டில், எதிர்க்ட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஆன்டனிஸ் சமாரஸ் கூறுகையில், கிரேக்கத்தில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிகுந்த நம்பிக்கையுடன் இந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸின் சைப்ராஸ், அந்த சீர்திருத்தங்கள் நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றம். கிரேக்க சமூகத்தை ஐரோப்பிய நாடுகளிடம் அடகு வைக்கும் நடவடிக்கை இது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துக் கொண்டிருந்த போது சுமார் 7000 பேர் வெளியில் கூடி சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: