பாகிஸ்தானில் ஹிந்து ஆசிரமம் மீது தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஏப்.2 - பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹிந்து ஆசிரமம் ஒன்ரில் நான்கு பேர் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்துகுரிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட திருசூலம் ஒன்று மீட்கப்பட்டதாகவும் தார்பார்கர் மாவட்ட போலீஸ் அதிகாரி முனீர் ஷேக் தெரிவித்தார். ஹிந்துக்கள் அதிகம் உள்ள தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கடவுல் சிலையில் இருந்த துணி வன்முறையாளர்களினால் அகற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து திருசூலம் ஒன்றும் திருடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மாவட்டத்தில் உள்ள ஹிந்து சமூதாயத்தினர், மிதிபகுதியில் உள்ள காஷ்மீர் செளக் என்ற இடத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சில இடங்களில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: