முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மன் பேக்கரியை தாக்குவதற்கு முன்பே நோட்டமிட்ட ஹெட்லி

புதன்கிழமை, 1 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

சிகாகோ, ஜுன் 2 - மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியை தான் நோட்டமிட்டதாகவும் அதன்பிறுகுதான் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிகாகோ கோர்ட்டில் டேவிட் ஹெட்லி சாட்சியம் அளித்தான். அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு துறையினர் நடத்திய அதிரடி சோதனையின்போது பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, அவனது கூட்டாளி தகவூர் ராணா ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீதான் வழக்கு விசாரணை சிகாகோ நகரில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் டேவிட் ஹெட்லி சாட்சியம் அளித்தான். மும்பை தாக்குதல் வழக்கில் கூட்டு சதியாளனாக சேர்க்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி அந்த நீதிமன்றத்தில் கூறுகையில், மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியை தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக தான் நேரில் சென்று நோட்டமிட்டதாக கூறினான். அப்போது அந்த ஜெர்மன் பேக்கரியை வீடியோ படம் எடுத்ததாகவும் அவன் தெரிவித்தான். 

டெல்லி, புஷ்கர், புனே ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களை தான் நோட்டமிட்டதாகவும் அவன் தெரிவித்தான். தான் நோட்டமிட்டு வந்தபிறகு 2010 பிப்ரவரி மாதம் 13  ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மும்பை தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த புனே தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இந்திய முஜாஹிதீன் துணையுடன் கராச்சியில் இருந்துவந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். ஹெட்லியின் சாட்சியம் நேற்றுடன் சிகாகோ நீதிமன்றத்தில் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்