முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன்: இந்திய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஏப்.6 - பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதுகுறித்து கிராண்ட் தோர்ன்டன் எம்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில் பொருளாதார வளர்ச்சியில் இந்திய கூட்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு விதிக்கின்றன. பிரிட்டனில் உள்ள 700க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அவற்றில் முதன்மையாக 41 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் முலம் ஆண்டுக்கு 19 பில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் 1.9 லட்சம் கோடி, வருவாய் கிடக்கிறது.

இது குறுத்து கிராண்ட்தோர்ன்டன் நிறுவனத்தின் தெற்காசியத் தலைவர் கூறுகையில், பிரிட்டனில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் ஆர்வத்துடன் இருக்கின்றன. ஒரு நாடுகளுக்கு இடையேயான கலாசார பின்னணி முக்கியக் காரணமாக இருக்கிறது என்றார். 

இது தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய தூதர் ரஞ்சன் மத்தாய், கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியதாவது: பிரிட்டனில் இந்சிய நிறுவனங்கள் எந்த அளவிற்கு முதலீடு செய்துள்ளன என்பதைக் காட்டுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பிரிட்டனில் முதலீடு செய்வதில் 5-வது பெரிய இடத்தில் இந்திய நிறுவனங்கள் உள்ளன. மருந்து தயாரிப்பு, ரடாயன தொழில்நுட்பம், தொலைதொடரிபு, மோட்டார் வாகனம் மற்றும் தானியங்கி நிறுவனங்கள் அவற்றில் அடங்கும் என்றார்.

பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் வருவாய் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு அளித்த தகவல்களின்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று கிராண்ட் தோர்ன்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்