முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 இறுதிப் போட்டி: இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, ஏப்.6 - 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்றுவருகிறது.

கடந்த 16-ஆம் தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதில் இருந்து வங்காளதேசம், நெதர்லாந்து அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 10 சுற்று ஆட்டங்கள் 21-ந் தேதியில் இருந்து 1-ந் தேதியுடன் முடிந்தன. இதன் முடிவில் இந்தியா வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. 3-ஆம் தேதி நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெஸ்ட்இண்டீசை 27 ரன் விதியாசத்தில் வீழ்த்தியது. 4-ஆம் தேதி நடந்த 2-வது அரை இறுதியில் 6 விக்கெட் விதியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா விழ்த்தியது. 20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

இதில் இந்தியா இலங்கை அணிகள் மோதிகின்றன. இலங்கை அணி முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை இலங்கையை விழ்த்திதான் இந்தியா கைபற்றியது. இதே போல் 20 ஓவர் உலக கோப்பையையும் இலங்கையை விழ்த்தி இந்தியா வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இறு அணிகளும் கடுமையாக போராடும்.

இன்றைய இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார்ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில்  இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா : டோனி (கேப்டன்), ரகானே,ரோகித் சர்மா, வீராட் கோஹ்லி, யுவ்ராஜ் சிங், ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், மொகித்சர்மா, அமித் மிஸ்ரா, ஷிகார் தவான், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், முகமது சமி.

இலங்கை : சன்டிமால் (கேப்டன்), தில்சான், குஷால் பெரைரா, ஜெயவர்த்தனே, சங்ககரா, திரிமானே, மேத்யூஸ், மலிங்கா (துணை கேப்டன்), பெரைரா, செனனாயகே, மெண்டீஸ், ஹெராத், பிரசன்னா, குலசேகரா, சதுரங்கா, டிசில்வா, லக்மல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago