முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

44 பந்தில் 72 ரன் எடுத்தது எனது சிறந்த ஆட்டம்: கோஹ்லி

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, ஏப்.6 - 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எளிதில் நசுக்கி தள்ளியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. கேப்டன் டுபெலிசிஸ் 41 பந்தில 58 ரன்னும், டுமினி 40 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 3 விக்கெட் கைபற்றினார்.

பின்னர் விளையாடிய இந்தியா 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வீராட் கோஹ்லி 44 பந்தில் 72 ரன்னும், ரகானே 30 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். ரெய்னா 10 பந்தில் 21 ரன் எடுத்தார்.

நேற்றைய முன்தின ஆட்டத்தில் வெற்றிக்கான ரன்னை டோனி 19-ஓவரில் கடைசி பந்தில் எடுத்து இருக்கலாம். ஆனால் அவர் அதை எடுக்காமல் சிறப்பாக விளையாடி வந்த கோஹ்லிக்கு வெற்றிக்கான ரன்னை எடுப்பதற்காக விட்டுக்கொடுத்தார். கோஹ்லியும் கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெறவைத்தார். இது கோஹ்லிக்கு கேப்டன் டோனி கொடுத்த பரிசாகும். இதை இருவருமே பேட்டியின்போது தெரிவித்தனர். 

இது குறித்து டோனி கூறியதாவது: வெற்றிக்கான ரன்னை கோஹ்லி எடுக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தேன். இதை அவரிடமே நான் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற வீராட் கோஹ்லி கூறியதாவது: வெற்றிக்கான ரன்னை எடுத்து ஆட்டத்தை முடிக்குமாறு நான் டோனியிடம் சொன்னேன். ஆனால் அவர் வெற்றிக்கான ரன்னை எடுக்குமாறு எனக்கு வாய்ப்பு தந்தார். இது எனக்கு கிடைத்த பரிசாகும். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 20 ஓவர் போட்டியில் என்து சிறந்த ஆட்டம் இதுவாகும். இதேபோல் அஸ்வினின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் நேர்த்தியுடன் வீசி தென் ஆப்பிரிக்காவின் முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago