முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., ரசிகருக்கு இறுதிப் போட்டி டிக்கெட் வாங்கித் தந்த தோனி!

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், ஏப்.7 - சிகாகோவிலிருந்து பாகிஸ்தான் ஆட்டங்களை காண வந்த, அந்நாட்டு ரசிகர் ஒருவருக்கு, இறுதிப் போட்டியை ரசிக்க டிக்கெட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி. 

டி20 உலகக் கோப்பை வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி நேற்று இரவு நடந்தது. 

இந்தத் தொடரில் பாகிஸ்தானின் ஆட்டத்தைக் காண, அந்த அணியின் ரசிகர் முகமது பஷீர் சிகாகோவில் இருந்து வந்திருந்தார். தனது தேச அணி அரையிறுதிக்கு முன்னரே வெளியேறினாலும், இந்தியாவின் ஆட்டத்தைக் காண ஊருக்குத் திரும்பாமல் இருந்தார். சமீபத்தில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டபோது வேடிக்கை பார்க்க சென்ற இவரை தோனி சந்தித்தார். 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தைக் காண பஷீர் வந்திருந்ததால், தோனி அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரைப் பற்றி விசாரித்துள்ளார். தன்னிடம் இறுதிப் போட்டியைக் காண டிக்கெட் இல்லாததை கூறிய பஷீருக்கு பயிற்சியாளரிடம் கூறி காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டை தோனி ஏற்பாடு செய்துள்ளார். 

இந்தச் சம்பவத்திற்கு பிறகு தோனியின் ரசிகராக மாறிவிட்டார் பஷீர். 50 வயது மதிக்கத்தக்க பஷீர், சிகாகோ நகரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராய் இருந்தாலும், இவரது மனைவி இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் ஆடும் ஆட்டங்களில், அந்த நாட்டு தேசியக் கொடியை போன்றே உடையணிந்து, உற்சாகப்படுத்தும் பஷீரைப் பார்க்கலாம். 

டி20 உலகக் கோப்பையில் எல்லா ஆட்டத்திற்குமான டிக்கெட்டுகளை, தலா 20 டாலர் வீதம் விலை கொடுத்து வாங்கிய பஷீர், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கு மட்டும் 80 டாலர் வரை செலவழித்துள்ளார். அதைவிட விலை கூடுதலாக இருந்தாலும் தான் வாங்கத் தயங்கப் போவதில்லை என்று பஷீர் கூறுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்