முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஏர் பிஸ்டல் உலகத் தரவரிசை: ஹீனா சித்து முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.7 - இந்தியாவின் முன்னணி துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றினார். 

பஞ்சாப்பின் லூதியானாவை சேர்ந்த ஹீனா சித்து (24), உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர். 

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் (சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு) உலகக் கோப்பை போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அதன் மூலம், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பிஸ்டல் பிரிவில், அதிக எண்ணிக்கையில் பதக்கங்கள் வென்ற இந்தியர் என்ற சாதனையை வசப்படுத்தினார். 

இந்த வெற்றியின் மூலம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தரவரிசையில் 2-ம் இடத்தில் இருந்த ஹீனா, தற்போது வெளியிடப்பட்ட ஐ.எஸ்.எஸ்.எப் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றினார். 

2016 ஒலிம்பிக்கில், இந்தியாவின் பதக்க நம்பிக்கை வீராங்கனையாகத் திகழும் ஹீனா, "உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆனது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் கடுமையாக உழைத்ததற்கான பலனாகவே இதைப் பார்க்கிறேன். 

என் கணவர் ரோனக் மற்றும் பயிற்சியாளர் அனாடோலி ஆகியோர் எனது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். அரசும் உரிய வகையில் உதவி புரிகின்றது. ஒலிம்பிக் கோல்ட் குவஸ்ட் அமைப்பின் உறுதுணைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்