முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலமன் தீவில் வெள்ளப் பெருக்கு: பலி 16-ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

ஹோனியாரா, ஏப்.7 - சாலமன் தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததால்குழந்தைகள் உள்பட 40 பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து அவசரக்கால மையத்தின் மேலைளர் கிரஹாம் ஹென்னா கூறியதாவது: வெள்ளப் பெருக்கின் காரணமாக 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவசரக்கால முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் 16 பேரின் உடல்கள் கிடைத்துள்ளனர் என்றார்.

இதனிடையே, சாலமன் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 6.0 ஆகப் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். சாலமன் தீவில் வீசிய புயல் காரணமாக அந்நாட்டின் முக்கிய நதியான மடானிகாயுவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக 2 பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஹோனியாரா நகர் முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக  சுகாதாரம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளதால் சாலமன் தீவில் டெங்கு காய்ச்சல் பரவ இது வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்