முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நிலநடுக்கம்: 21 பேர் படு காயம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப்.7 - தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 21 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யுன்னான் மாகாணத்தின் யாங்ஷான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக இருந்ததாக அந்த மாகாண நில அதிர்வு நிர்வாகத்திற்கான செய்தித் தொடர்பாளர் லீஃபெய் தெரிவித்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: நிலநடுக்கத்தால் பலத்த சத்தம் கேட்டது. உறங்கிக் கொண்டிருந்த நாங்கள் சத்தம் கேட்டு விழித்தோம், என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நீர் மின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யுன்னான் மக்கள் விவகாரத் துறையிடன் இணைந்து பேரிடர் நிவாரண அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வீடு இழந்தவர்கள் தங்குவதற்கென 400 குடாறங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அந்த மாகாண அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்