முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்க அமெரிக்கா அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்.7 - ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்பனை செய்ய போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. 1979-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈரானிடம் அமெரிக்கா மீண்டும் வர்த்தக உறவை புதுப்பித்துள்ளது.

இதுகுறித்து போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: விமான உதிரி பாகங்களை மட்டும் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய விமானங்களை விற்க அனுமதியில்லை. இந்த அனுமதியும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்றார். அமெரிக்காவில் உள்ள மற்றொரு விமானத் தயாரிப்பு நிறுவனம், ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்பனை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசிடம் அனுமசி கோரியபோது, அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளது. 

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இதையடுத்து அணுச்செறிவூட்டல் பணியை நிறுத்திக்கொள்வதாக ஈரானுக்கு, அமெரிக்கா உள்ளட்ட நாடுகளுக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை 6 மாதங்களுக்குத் தளர்த்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், விமான நிறுவனங்களுக்கு தற்போது அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

ஈரானின் 1979-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மீண்டும் அந்நாட்டுடன் அமெரிக்கா தற்போது வர்த்தக உறவை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்