முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் மசூதி துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

யோபே, ஏப்.7 - நைஜீரியாவின் வடகிழக்கு பகுதி மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

நைஜீரியா யோபே மாகாண தலைநகர் தமாதுருவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது பூனி கரி கிராமம். இங்குள்ள மசூதியில் ஏராளமான முஸ்லிம்ரள் நாளின் முதல் தொழுகையை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கியடன் உள்ளே புகுந்த் தீவிரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் மசூதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் உள்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இஸ்லாமிய மாநிலத்தை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டுவருகிறது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மசூதியில் தாக்கல் நடத்தி இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் இந்த ஆண்டு மட்டும் தீவிரவாத தாக்குதல்களில் 1200 பேர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago