முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பை: இலங்கை சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

மிர்பூர், ஏப்.7 - டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி சாம்பியன் ஆனது. இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் அணி என்ற பெருமையை அடையும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

ஏற்கெனவே இருமுறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி கோப்பையைக் கோட்டைவிட்ட இலங்கை அணி, இப்போது 3-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்து சாம்பியன் ஆனது. இப்போட்டியில் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமிழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

சங்ககாரா ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து, இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டார். திசாரே பெரேரா ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் சேர்த்தார். ஜெயவர்த்தனே 24 ரன்களையும், தில்ஷன் 18 ரன்களயும் எடுத்தனர். குசல் பெரேரா 5 ரன்களையும், திரிமன்னே 7 ரன்களையும் எடுத்தனர்.

முன்னதாக, இந்தியா தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.கோலி சிறப்பாக பேட் செய்து 58 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். ரோஹித் சர்மா 29 ரன்களைச் சேர்த்தார். மிகவும் திணறிய யுவராஜ் 21 பந்துகளில் 11 ரன்களே எடுத்தார். தோனி ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார். ரஹானே 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்