முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கல்லூரி அடிதடியில் 100 மாணவர்கள் கைது

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லா விஸ்டா, ஏப்.8 - அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் மாணவர்களுக்கு இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான்டா பார்பரா கவுன்டியில் உள்ளது இஸ்லா விஸ்டா நகரம். மக்கள் நடமாட்டம் மிகுந்த கடற்கரை பகுதியான இங்கு ஒரு கல்லூரியின் வருடாந்திர கோடை திருவிழா நடைபெற்றது. அப்போது கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே அடிதடி மோதல் நடைபெற்றது. கடற்கரையில் 15 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் கூடியிருந்த பகுதியில் மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சான்டா பார்பரா போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். ஆத்திரம் அடைந்த மாணவர்கள், போலீஸார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்பட 44 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டனர். இஸ்லா விஸ்டாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்