முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸில் சாட்சி சொல்வதற்கு நீதிமன்றம் வந்த நாய்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பாரீஸ்,ஏப்.8 - பிரான்ஸில் தன்னுடைய எஜமானரைக் கொன்ற குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக ஒரு நாய் நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்தது. அந்த நாய்க்கு வயது ஒன்பது.

தலைநகர் பாரிஸில் 59 வயது எஜமானி ஒருவருடன் டாங்கோ எனும் லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய் வசித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்த எஜமானி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இந்த வழக்கு தற்போது பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நாயின் எஜமானி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வழக்கு நடைபெறுகிறது. கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்று அடையாளம் காட்டுவதற்காக அந்த நாயை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

நாயிடமிருந்து வெளிப்படும் எதிர்வினையை வைத்து யார் குற்றவாளி என்று அறிந்து கொள்ள, கைதிகள் ஒவ்வொருவரும் நாயை அடிப்பதுபோல் பாசாங்கு செய்ய வைக்கப்பட்டனர். அப்போது அவர்களில் ஒருவரைப் பார்த்து அந்த நாய் கோபமாகக் குரைத்ததாக கூறப்படுகிறது.

பிரான்ஸில் சாட்சி சொல்லவும் குற்றவாளிகளை அடையாளம் காட்டவும் நாய்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது என்பது புதிதல்ல. கடந்த 2008-ல் ஸ்கூபி எனும் பெயருடைய நாய்தான் குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக நீதிமன்றத்திற்குச் அழைத்து வரப்பட்ட முதல் மிருகமாகும். ஆனால் உள்ளூர் பொதுமக்களைப் பொறுத்த வரையில் இத்தகைய முயற்சிகள் தோல்வியடையும் என்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்