முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியாக முடிந்த ஆப்கான் அதிபர் தேர்தல்: ஒபாமா பாராட்டு

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்.8 - ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் அதிபர் தேர்தல் நடைபெற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். போரால் சீரழிந்துள்ள நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் முலம் ஜனநாயக மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலில் ஆர்வமுடன் பங்கெடுத்த அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக மற்றத்தை உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும், எங்கள் நட்பு நாடுகளும் படையை விலக்கிக் கொள்ளப்படவுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வாக்களித்துள்ள இந்த தேர்கல் மற்றொரு முக்கிய மைல்கல்.

இது தங்கள் நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள பொறுப்புணப்வை காட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக் பாதுகாப்பிற்கு சர்வதேச சமுகத்தின் ஆதரவு தொடரும். அந்நாட்டின் இறையான்மை, ஸ்திரத்தன்மை, ஒற்றுமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசுடன் இணைந்து பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுவோம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், வன்முறை அச்சுருத்தலுக்கும் மத்தியில் தேர்தல் ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயகத்தை ஆப்கானிஸ்தான் மக்கள் நிலைநாட்டியுள்ளனர், என்றார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் கூறுகையில், அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் தொடங்குகிறது. இந்த ஆண்டு இறுதியில் எங்கள் படைகள் வாபஸ் பெற்றாலும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நலன் மீதான அக்கறையை நாங்கள் கைவிட மாட்டோம் என்றார்.சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக் செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், அதிபர் தேர்தலின் முலம் ஆப்கானிஸ்தானில் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தைன்மையுடன் கூடிய புதிய அதியாயம் தொடங்கும் என்றார். ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாயின் பதவிக் காலம் முடிவடைந்ததையோட்டி அந்நாட்டிற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.

காபூலுக்கு தெற்கிலுள்ள லோகர் மாகாணத்தில் ஒரு வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்