முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூன் 2 - கேரள சட்டசபையின் இரண்டு நாள் கூட்டம் நேற்று காலை துவங்கியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் சக்தான் பதவிபிரமாணம் செய்துவைத்தார். கேரள சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 இடங்களும், இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 68 இடங்களும் கிடைத்தன. முதலமைச்சராக உம்மன்சாண்டி பதவியேற்றார். மேலும் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பதற்கு வசதியாக கேரள சட்டசபையின் இரண்டுநாள் கூட்டம் நேற்று காலை துவங்கியது. அப்போது அகர வரிசைப்படி 140 எம்.எல்.ஏ.க்களும் ஒரு நியமன உறுப்பினரும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் என்.சக்தான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். நேற்று காலை 9 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த எம்.எல்.ஏ.க்களில் 42 பேர் புதிய எம்.எல்.ஏ.க்கள். மற்றவர்கள் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர்கள். கேரள சட்டசபையில் நீண்டகாலம் பதவி வகித்த கே.எம்.மணி இப்போது 12 வது முறையாக எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அடுத்தபடியாக நீண்டகாலம் பதவி வகித்துவந்த முதல்வர் உம்மன்சாண்டியும் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஏ.பி.அப்துல்லாகுட்டி முதலாவதாக பதவியேற்றுக்கொண்டார். நியமன உறுப்பினர் லூடி லூயிஸ் ஆங்கிலோ இந்திய பிரதிநிதியாக பதவியேற்றுக்கொண்டார். 3 எம்.எல்.ஏ.க்கள் ஆங்கிலத்திலும், ஒருவர் கன்னடத்திலும் மற்றொருவர் தமிழிலும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். சபாநாயகர் பதவிக்கு கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago