முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாகித் அப்ரிடி மீது நடவடிக்கை - பாக். கிரிக். வாரியம் தடாலடி

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். 2 - பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப் ரிடி மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது வாரியம். இது பற்றிய விபரம் வருமாறு - 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவில் சுற்று ப் பயணம் செய்தது. இதனைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப் பயணம் 

மேற்கொண்டுள்ளது. 

மேற்கு இந்தியத் தீவு சுற்றுப் பயணத்திற்கு சாகித் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். பின்பு அயர்லாந்து சுற்றுப் பயணத்திற்கு மூத்த வீரரான மிஸ்பா உல் ஹக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இதனால் அதிருப்தி அடைந்த சாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாக். கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது.

அப்ரிடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதும், தேர்வு குழு உறுப்பினர் முகமது இல்லியாஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். 

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்ரிடி மீது நட வடிக்கை எடுத்துள்ளது. அவரது ஒப்பந்தத்தை சஸ்பெண்டு செய்துள்ளது. அதோடு, அவருக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழையு ம், நீக்கி உள்ளது. 

இதன் காரணமாக அவர் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி போட்டியிலு ம் மற்ற எந்த 20 ஓவர் போட்டியிலும் விளையாட முடியாது. அதோடு விமர்சனம் செய்தது தொடர்பாக அப்ரிடியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பவர் வக் கார் யூனிஸ். அவருக்கும், அப்ரிடிக்கும், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே அப்ரிடி இந்த முடிவுக்கு வந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வக்கார் யூனிஸ் தற்போது அயர்லாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கிறா ர். எனவே அவர் நாடு திரும்பியதும் இந்தப் பிரச்சினை குறித்து அவரி டம் வாரியம் விசாரணை நடத்தும் என்றும் மற்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago