முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜூக்கு அதிக மவுஸ் இருக்கும்: கௌதம் கம்பீர்

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.10 - ஐபிஎல் ஏலம் இன்று நடந்தால் கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யுவராஜை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளது என கொல்கத்தா அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் யூவராஜ் 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரத்தில் சச்சின், ஹர்பஜன் உள்ளிட்டவீரர்கள் யுவராஜூக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் கௌதம் கம்பீரும் இணைந்துள்ளார். 2011 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கம்பீர் தெரிவித்ததாவது: எந்தவொரு கிரிக்கெட் வீரரும் யுவராஜை விமர்சித்ததாக தெரியவில்லை. ஊடகங்கள் தான் விமர்சிக்கின்றனர். வீரர்கள் என்ன தெரிவித்தனர் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் யுவ்ராஜ் சிங் சிறந்த மேட்ச் வின்னர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

7-வது ஐபிஎல் ஏலத்தின் போது பெங்களூரு அணிக்கு முன்னதாக யுவராஜை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி முயற்சித்தது. இன்று ஐபிஎல் ஏலம் நடந்தாலும், அவரை அதே ஆர்வத்துடன் ஏலத்தில் எடுப்போம். யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது அணி நிர்வாகிகள் 6 பேர் செர்ந்து எடுத்த முடிவு. எனவேதான் அவரை எங்கள் அணிக்கு வாங்கமுயற்சித்தோம்.

கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. வெற்றி, தோல்வி இரண்டிலும் 11 வீரர்களுக்கும் பங்குள்ளது. இருபது ஓவர் ஆட்டத்தில் போட்ஸ்மேன் சந்திக்கும் பந்துகள் சொற்பமே. அதனால், பின் வரிசையில் இறங்கும் வீரர்களை விட முன் வரிசையில் இறங்குபவர்கள் அதிக பந்துகளை சந்திக்க நேரிடும் என கம்பீர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்