முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் ஓடும் ரயிலில் குண்டு வெடித்ததில் 14 பேர் பலி

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

குவெட்டா, ஏப்.10 - பாகிஸ்தானில் ஓடும் பயிலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 14 பயணிகள் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே தென்கிழக்கு பகுதியில் பலுசிஸ்தான் பிராந்தியம் உள்ளது. அப்பிராந்தியத்தின் தலைநகர் குவெட்டா நகருக்கு அருகே உள்ள சிபியில் ராவல்பிண்டி செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணிகள் பெட்டியில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகள் வெடித்தன. ரயலில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பலுசிஸ்தானில் இம்மாத துவக்கத்தில் இருபிரிவினைவாத குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வனமுறை வெடித்தது. இந்த வன்முறையில் 30 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ரயிலில் வெடிகுண்டு தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என பாகிஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் கவாஜா சாத்ரபீக் கூறுகையில், ரயிலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 பயணிகள் உயிரிழந்துள்ளனர். குண்டு வெடிப்புக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொருப்பேற்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்றார்.

இந்நிலையில், கராச்சி நகரில் உள்ள ஜாம்ஜாமா வர்த்தக வளாகம், தெற்கு சிந்து பிராந்தியம் உள்பட 11 இடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி கும்பல் கையெறி  வீதி தாக்குதல் நடத்தின. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு எற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்