முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தின்போது 40 பேரை கொலை செய்தவர் கைது

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பிரஸ்னோ, ஏப்,11 - போதை பொருள் கடத்தியபோது, 40 பேரை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலையை  அவர் ஒப்புக்கொண்டதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் போதைபொருள் கடத்தலில் ஜோஸ் மானுவேல் என்பவர் ஈடுபட்டார். இதில் தன்னை பாதுகாப்பதற்காக இவர் 40 பேரை படுகொலை செய்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து இவரை போலீஸார் கைது செய்தனர். ஒரு கொலை  வழக்கு தொடர்பாக இவரை போலீஸார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். இவர் மீது வழக்கு விசாரணை நடை பெற்றது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் எர்ரக் ஜெட் கூறுகையில், போதை பொருள் கடத்தலின்போது, கலிபோர்னியாவை சேர்ந்த 9 பேரை ஜோஸ் கொலை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள்  உள்ளன. எனவே இவருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார். ஆனால் போதை பொருள் கடத்தும்போது, அதற்கு இடையூறாக இருந்த 40 பேரை கொன்றதாக ஜோஸ்  வாக்குமூலம் அளித்துள்ளார். கலிபோர்னியாவில் அவர் 30 ஆண்டுகள்  வசித்துள்ளார். அப்போது அவர் 40 கொலைகள் செய்துள்ளார். ஆள் கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இது விசாரணையில்  நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    

   

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago