முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைமுதல்வர் குற்றச்சாட்டுக்கு ராஜ்தாக்கரே பதிலடி

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

மும்பை,மே.2 - கூட்டுறவு வங்கி ஊழல் மற்றும் பால்வாவுடன் உள்ள தொடர்பை மறைப்பதற்காகவே என் சிறிய தந்தை பால் தாக்கரே மீது துணை முதல்வர் அஜித் பவார் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் என்று ராஜ்தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே எதுவும் செய்யவில்லை என்று மாநில துணைமுதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அஜித் பவார் குற்றஞ்சாட்யிருந்தார். இதற்கு பால்தாக்கரே ஏற்கனவே பதில் அளித்துவிட்டார். தற்போது பால்தாக்கரேயின் அண்ணன் மகனும் மகாராஷ்டிரா நிர்மான் சமிதி தலைவருமான ராஜ் தாக்கரேயும் பால்தாக்ரேவுக்கு ஆதரவாக பேசியிருப்பதோடு அஜித் பவாருக்கு கடுமையாக பதில் அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ஸ்வான் கம்பெனி உயரதிகாரி பால்வாவுடன் உள்ள தொடர்பை மறைப்பதற்காகவே என்னுடைய சித்தப்பா பால்தாக்கரே மீது குற்றச்சாட்டை அஜித் பவார் சுமத்தியுள்ளார். பால் தாக்கரேயின் வயதையும் பொருட்படுத்தாமல் இந்த குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார். இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எனக்கு குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது சரத்பவார் கட்சிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் பால்தாக்கரே மீது குற்றச்சாட்டை அஜித்பவார் சுமத்தியுள்ளார். பால் தாக்கரே நடத்திவரும் சிவசேனா கட்சியில்தான் ராஜ்தாக்கரே இருந்தார். கட்சியில் ராஜ்தாக்கரேயை புறக்கணித்துவிட்டு தன்னுடைய மகனுக்கு பால்தாக்கரே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இதனால் சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறிய ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா நிர்மாண் சமிதி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சிக்கு ஓரளவு இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தன்னுடைய சித்தப்பாவை குறை கூறியிருப்பது ராஜ்தாக்கரேவுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் சேரலாம். அதன் அறிகுறியாக இந்த பதில் இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago