முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 34 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஏப்.12 - ஈராக்கில் கார் நடந்த குண்டு தாக்குதல் சம்பவத்தில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். 

ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளி்ல் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாக்தாத்திலிருந்து, 80 கி.மீ. தூரத்தில் உள்ள நுமானியா நகரில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் கார் குண்டு வெடித்தது. அதில் 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். 

இதேபோல் பாக்தாத் நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காமியா பகுதியிலும் கார் குண்டு வெடித்தது. இதில் 9பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். ஷாப் ஷம்மையா, கர்ராடா, மாமில், சதார் நகரம்  உள்ளிட்ட பகுதிகளிலும் கார் குண்டு வெடித்தது. இதில் 13 பேர் உயிரி ழந்தனர். 42 பேர் காயமடைந்தனர். மேலும் பாக்தாத்தின் ஐதிரியாவில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் மற்றொரு கார் குண்டு வெடித்தது. இதில் 3பேர் கொல்லப் பட்டனர். 8 பேர் காயமடைந்தனர்.

ஷபா அல்போர் என்ற இடத்தில் குண்டுகள் வீசப்பட்டன. இதில் இதில் 4பேர் கொல்லப் பட்டனர். 13 பேர் காயமடைந்தனர். ஒரு நாளில் நடந்த  தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 91 பேர் காயமடைந்தனர். இன்த தாக்குதல்கள் மூலம் போர் அறிவிப்பை தீவிரவாதிகள் பகிரங்கமாக வெளியி்ட்டுள்ளனர் என்று ஈராக் உள்துறை அமைச்சர் தெரிவி்த்துள்ளார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்