முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தல்: ரஷ்ய உளவுத்துறை

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஏப்.12 - மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

மலேசிய தலைநகர் கொலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற விமானம் கடந்த மாதம் 8-ஆம் தேதி திடீரென காணாமல் போனது. அதில் 12 ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தன. தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது மாயமானது தெரியவந்தது. விசாரணையில் விமானத்தின் தகவல் தொடர்பு சாதங்கள் திட்டமிட்டு அணைக்கப்பட்டதும், விமானம் திசை மாறி சென்றதும்தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இதற்கிடையில், மலேசிய அரசு உண்மையை மறைக்கிறது. விமானம் மாயமானதில் ஏதோ மர்மம் இருக்கிறது.விமானத்தை பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று  சீன அரசும் விமானத்தில் சென்ற 156 சீன பயணிகளின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுதி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 2,500 கி.மீ. தொலைவில் சில மர்ம பொருட்கள் மிதப்பது தெரிய வந்தது. அவை மலேசிய விமானத்தின் நோறுங்கிய பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் கடலில் மிதந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என்பது உறுதி செய்யப்பட வில்லை. இதற்கிடையில், கடலுக்கு அடியில் இருந்து விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் வந்ததாக சீன அரசு தெரிவித்தது.

உடனடியாக கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்கா வழங்கிய நவீன கருவி உதவுயோடு தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அந்த இடத்தை நெருங்கிவிட்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் திடீர் திருப்பமாக விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய உளவுத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: 

மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கட்த்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அணைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு, வேறு இடங்களில் அடைத்துவைத்துள்ளனர். மண் குடிசைகளில் எந்த தொலைத் தொடர்பும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்துள்ளனர். இவ்வாறு ரஷ்ய உளவுத் துறையினர் கூறினர். விமானம் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் நிலையில், விமான பயணிகள் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவுத் துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago