முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதிரியார்களை மன்னித்து விடுங்கள்: போப் வேண்டுகோள்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

வாடிகன், ஏப்.13 - இத்தாலி மற்றும் பிராசிலில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்களில் பணிபுரியும் ஒரு சில பாதரியார்கள் சிறுவர் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பாலியல் தொல்லைக்கு பல சிறுமிகள் ஆளாக்கப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாயின. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், பெண் குழந்தைகளை பாலியில்ரீதியாக துன்புறுத்திய பாதரியார்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் சென்ற வாரம் அறிவித்தார்.

இந்நிலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்களில் பணிபுரியும் ஒரு சில பாதிரியார்கள் செய்யும் தவறை எந்த காரணம் முன்னிட்டும் ஏற்க முடியாது. தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக கூறுகிறேன். அதே நேரம் அவர்களை மன்னித்து விடுங்கள். எல்லா பாதிரியார்களும் அப்படி அல்ல ஒரு சிலரின் தவறான நடத்தைதான் இது , அவர்களை மன்னித்து விடுங்கள் என்று தனிப்பட்ட முறையில் கேட்டு கொள்கிறேன் என்று போப் பிரான்சிஸ் முதல் முறையாக கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்