முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலமன் தீவுகள் அருகே கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஏப்.14 - பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே சாலமன் தீவுகள் உள்ளன. அதன் அருகே உள்ள மகீரா தீவில் கிரா கிரா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனாள் அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி மலைகளில் பாதுகாப்பாக தங்கினர். தொடக்கத்தில் 8 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவானது. பின்னர் அது 7.6 ரிக்டர் என உறுதி செய்யப்பட்டது. கிரா கிரா தென்பகுதியில் கடலுக்குல் அடியில் 100 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் வழக்கத்தை விட அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. இதனால், சாலமன் தீவுகள் பப்புவலா, நியூகினியா, வனாது ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், பிஜி, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே சிறுது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையே, நிலநடுக்கம் ஏற்பட்ட மகிரா தீவில் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு இதே பகுதியில் நிலநடுக்கமும், அதை தொடர்ந்து உருவான சுனாமியில் 5 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்