முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் தீவிரவாதிகள் சுட்டதில் 19 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

மைடுகுரி, ஏப்.14 - ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 3 இடங்களில் போகோ ஹராம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 6 கல்லூரி ஆசிரியர்கள் உள்பட் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோ மாகணத்திற்கு உள்பட்ட திக்வா நகரில் உள்ள கல்லூரிக்கு புகுந்த போகோ ஹராம் அமைப்பைச்  சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் 6 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் 2 பாதுகாவலர் கொல்லப்பட்டனர். பல பெண்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர் என்று தெரிவித்தனர். காலா பால்கே நகரில் தீவிரவாதிகள் நிகழ்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.பல வீடுகளை தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தினர் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தல்வா கிராமம் அருகே உள்ள மைடுகுரியில் இருந்து பியூ நகருக்குச் செல்லும் நெடிஞ்சாலையை மறித்த தீவிரவாதிகள் ஒரு பெருந்தில் இருந்த பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் 8 பயணிகள் உயிரிழந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த முஸ்தபா அலி என்ற பயணி தெரிவித்தார். தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலை போர்னோ மாகாணத்தின் சென்ட் சபை உறுப்பினர் அகமது ஜின்னா உறுதிப்படுத்தியுள்ளார்.

நைஜீரியாவில் இந்த ஆண்டு தீவிரவாதிகள் நிகழ்த்திய  தாக்குதலில் இதுவரை 1,500 பேர் கொல்லப்பட்டது நினைவுகூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்