முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு: 71 பேர் உடல் சிதறி பலி

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

அபுஜா, ஏப்.16 - நைஜீரிய தலைநகர் அபுஜாவில் பஸ் நிலையத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 71 பேர் சம்பவ இடத்திலேயே உடல் டிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைஜீரிய தலைநகர் அபுஜாவில் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் வந்து சென்று கொண்டிருந்தனர்.. அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. தகவல் அறிந்த அபுஜா காவல் துறையினரும்், மீட்பு படையினரும் சம்பல இடத்துக்கு விரைவதற்குள் மற்றொரு குண்டு வெடித்து சிதறியது.இதுகுறித்து காவல் துறை செய்தியாளர்களிடம்  கூறியதாவது: பஸ் நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 71 பயணிகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

வெடிகுண்டு தாக்குதலில் பஸ் நிலையத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பஸ்கள் வெடித்து சிதறின. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சியாட்சி கேட்டு வனமுறையில் ஈடுபட்டுவரும் போகோ ஹரம் என்ற தீவிரவாத இயக்கத்தினர்தான் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

போகோ ஹரம் தாக்குதலில் கடந்த ஓராண்டில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்