முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிசைவாசிகளுக்கு குறைந்த செலவில் வீடு - மத்திய அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.3 - நகர்ப்புறங்களில் குடிசைகள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் ராஜீவ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடிசைவாசிகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டிக்கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசு மற்றும் தனியார் துறையினர்களையும் சேர்க்கப்படுகிறது. 

நாட்டில் உள்ள நகரங்களில் குடிசைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்த குடிசைகளில் சுகாதார வசதிகளும் குறைவாக இருக்கிறது. இதை தடுக்கும் வகையில் நாட்டில் உள்ள 250 நகரங்களில் சுமார் 3.2 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ராஜீவ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பொருளாதார விவகாரத்திற்கான கேபினட் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். இந்த திட்டத்தில் மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையினர்களிடம் இருந்து நிதியுதவி பெறப்படும். குடிசைவாசிகளுக்கே வீடுகள் சொந்தமாகும் என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்