முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே-12 கொழும்பில் மீனவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - இலங்கை மற்றும் தமிழக மீனவர் களுக்கு இடையிலான 2-ம் கட்ட பேச்சு வார்த்தை பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் மே மாதம் 12-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு நாள்கள் இந்த பேச்சுவார்த்தை நடத்தலாம்  என்று  மத்திய வெளியுறவுத் துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுபற்றி  மத்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர்  சுசித்ரா துரைக்கு, தமிழக மீண்வளத் துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவி்த்திருப்பதாவது: 

இலங்கை மற்றும் தமிழக மீனவர்களு க்கு இடையிலான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி கடிதம் எழுதினார். இந்த கடிதத்தைத் தொடர்ந்து இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்றது.

 இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் மார்ச் 13-ம்தேதி நடத்தலாம் என்று தங்களுக்கு தமிழக அரசின் சார்பில்  எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை என்பது இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை முழுமையாக  விடுவிப்பதை பொருத்தே நடைபெறும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டி ருந்தது.

ஆனால் இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலை தொடர்பான  எந்தச் செய்தியும் பேச்சுவார்த்தைக்கு முன்பாக அதாவது மார்ச் 11-ம் தேதி வரையில் தமிழக அரசுக்கு கிடைக்கவி்ல்லை. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை 98 தமிழக மீனவர்களுடன்  அவர்களுடைய 23 படகுகளும் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சு வாரத்தையை கொழும்பு நகரில் மே மாதம் 12, 13-ம்  தேதிகளில் நடத்த இலங்கை மீனவர்கள்  தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறையின் துணைச் செயலாளர்  எழுதிய கடிதம் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. எனவே அதே தேதியில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக மீனவர்களால் முடியும். சென்னையில் கடந்த ஜனவரி 27-ம் தேதி நடந்த பேச்சுவார்த்ததையில் பங்கேற்ற தமிழக -புதுச்சேரி மீனவ சங்கப் பிரதிநிதிகளே கொழும்பு நகரில் நடக்கும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தையைப் பார்வையிடுவதற்காக  தமிழக அரசின் சார்பிலான குழுவும் கொழும்பு செல்ல உள்ளது. மீன்வளத் துறை செயலாளர் மீன்வளத் துறை இயக்குனர், துறையின்   கூடுதல் இயக்குனர் ஆகியோர் அந்தக் குழுவில்  இடம்பெறுவர்  என்று  அந்த கடிதத்தில் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

          

            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்