முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தலிபான் தாக்குதலில் 25 வீரர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூன்.3 - ஆப்கானிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள சோதனை சாவடி ஒன்றில் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 

பயங்கர ஆயுதங்களுடன் ஆப்கனில் இருந்து பாகிஸ்தானில் ஊடுருவிய இவர்கள் சலோத்தல் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த சண்டை சுமார் 24 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 25 பாதுகாப்பு வீரர்கள் பலியாகி விட்டனர். அவர்களது உடலை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான சோதனை சாவடி எல்லைப் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கூடுதல் போலீஸ் படையினரும், ராணுவத்தினரும் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மூலமாகவும் தலிபான் தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago