முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் வன்முறை

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable


புருசெல்ஸ், ஏப்.18 - உக்ரைனில் உள்ள பால்டிக் கடற்பகுதியில் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவாதல், அப்பகுதிகளில் நேட்டோ ராணுவ படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதனால் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமுள்ள கிரீமியாவை வாக்கெடுப்பின் மூலம் ரஷ்யா கைப்பற்றியது. தற்போது அந்த பகுதி ரஷ்யாவுடன் இணைந்துள்ளது. இதை தொடர்ந்து, பால்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு உக்ரைனிய பகுதிகளை கைப்பற்றுவதற்காக ரஷ்ய ராணுவத்தினரின் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது என்று அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் காணப்படுவதால், உக்ரைனின் மேற்கே பால்டிக் கடல் பகுதியில் நேட்டோ நாடுகளின் போர் விமானங்களின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நேட்டோ படைகள் அங்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது என்று நேட்டோ ராணுவ தலைவர் ஆண்டர்ஸ் போக் ராஸ் முஸ்ஸன் நேற்று புருசெல்சில் தெரிவித்தார். கரீமியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேட்டோ உறுப்பினர்களான போலந்து மற்றும் பால்டிக் நாடுகளான லுதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகள் நேட்டோ கண்காணிப்பு பணியில் பங்கெடுத்து உள்ளன.
உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லையில் ரஷ்யா நிறுத்தி வைத்துள்ள 40 ஆயிரம் ராணுவத்தினரை வைத்து போரிட வேண்டும். அதை விடுத்து, அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நேட்டோ படையினர் கூறுகின்றனர். போர்பதற்றத்தை தணிக்க ஐ.நா. மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்