முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவில் சாலை விபத்து: இந்திய வம்சாவளி எம்.பி. சாவு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஏப்.19 - மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்திய வம்சாவளி வழக்குரைஞ்ரும், அந்நாட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால் சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெராக் மாகாணம் கம்பார் நகரிலுள்ள பிரதான சாலையில் கர்பால் சிங் சென்ற கார் மீது லாரி மோதியதில் அவரும், அவரது உதவியாளர் மைக்கேல் கோர்னாண்டஸ் ஆகியோர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் கர்பால் சிங்கின் மகன் ராம் சிங் மற்றும் அவரது வீட்டு பணியாளர் ஒருவரும் படுகாயமடைந்தனர். மனித உரிமை ஆர்வலரான கர்பால் சிங் பினாங்கு மாகாண நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னதாக 2005-ஆம் ஆண்டு நடந்த இதேபோன்ற சாலைவிபத்தில் கர்பால் சிங்கின் பல பாகங்கள் செயல் இழந்தன.

மலேசியாவின் உயர்நிலை குற்றவியல் வழக்குரைஞ்ரான கர்பால் சிங், பினாங்கு மாகாணத்தின் புகித் செலுகோர் தொகுதியிலிருந்து கடந்த 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக நடவடிக்கை கட்சியின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்