முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு சூடானில் முக்கிய நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

ஜூபா, ஏப்.19 - தெற்கு சூடானில் முக்கிய எண்ணெய் நகரான பென்டியூவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. 

எண்ணெய் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் நாடான தெற்கு சூடானில் அதிபர் சல்வாகீர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ரீக் மாச்சார் ஆகியோருக்கு இடையே இன ரீதியான மோதல் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து சல்வா கீர் பதவி விலக விலக வலியுறுத்தி ரீக் மாச்சார் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈடுபட்ட போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து ஐ.நா. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் பென்டியூ நகரில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், அந்நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்