முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 107 மாணவிகள் விடுவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

மைடுகூரி, ஏப்.19-நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 107 பள்ளி மாணவிகள் விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் 8 பெண்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்று அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. 

போர்னோ மாகாணத்தில் ஒரு பள்ளியில் இருந்து 129 மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இது குறித்து போகோ மாகாண ஆளுநர் கூறுகையில், கடத்திச் செல்லப்பட்ட போது, லாரியில் இருந்து குதித்து 4 மாணவிகள் தப்பினர். மேலும் 10 பேர் கடத்திச் சென்று வைக்கப்பட்ட இடத்தில் இருந்து தப்பினர் என்று தெரிவித்தார். 

இதற்கிடௌயே, அந்த நாட்டின் ராணுவ அதிகாரி கிறிஸ் ஒலுகோலாடே கூறுகையில், கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் மட்டும் பிடிப்பட்டுள்ளார். மற்ற மாணவிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். இந்த விவகாரம் குறித்து விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை. இந்தக் கடத்தல் சம்பவம் நடப்பதற்கு முன்பாக, அபுஜாவின் புறநகரில், பேருந்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்