முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

காத்மாண்டு, ஏப்.20 - இமய மலையில் உள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பயிற்சியாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நேப்பாள் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் மலையேற்றப் பயிற்சிப் பிரிவி அதிகாரி திலக்பாண்டே கூறியதாவது: எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கயிறு கட்டும் பணியில் நேப்பாளத்தைச் சேர்ந்த ஷெர்பா இன மக்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 5,800 மீட்டர் உயரத்தில் பாப்கார்ன் ஃபீ்ல்டு என்று அழைக்கப்படும் இடத்தில் திடீர் பனிச்சரிவு எற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 7 பேரைக் காணவில்லை. இதையடுத்து நேப்பாள ராணுவம், இமாலய மீட்புக் குழு, நேப்பாள ஆயுதப்படை பிரிவு ஆகியவை சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளில்  ஈடுபட்டன. மீட்க்கப்பட்ட 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று திலக் பாண்டே தெரிவித்தார். எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவதற்காக இந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்டோர் அனுமதி பெற்றுள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்படித்தக்கது.ே

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago